Commons:Wiki Loves Monuments 2018 in India/Howto/ta

This page is a translated version of a page Commons:Wiki Loves Monuments 2018 in India/Howto and the translation is 74% complete. Changes to the translation template, respectively the source language can be submitted through Commons:Wiki Loves Monuments 2018 in India/Howto and have to be approved by a translation administrator.
Outdated translations are marked like this.
முதல் படி: "இந்த வருடம் இந்தப்பட்டியலில் உள்ள சின்னங்களில் கவனம் செலுத்துகிறோம். Check the links and note the monument ID!

இரண்டாம் படி: "சின்னங்களை புகைப்படம் எடுக்கவும். முடிந்த அளவு பல படங்கள், நல்ல படங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். பல கோணங்களில் முயற்சி செய்யுங்கள்.

மூன்றாம் படி: "நீங்கள் புகைப்படம் எடுத்த விவரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். சின்னங்களின் இடம், மற்ற விவரங்கள் மற்றும் படமெடுத்த தேதிகளை குறித்துக்கொள்ளுங்கள்."

நான்காம் படி: "உங்களுக்கு விக்கிமீடியா காமஸ்லின் கணக்கு உள்ளதா? இல்லையென்றால் ஒரு கணக்கு உருவாக்கவும்-குறைந்த நேரமே எடுக்கும்! உங்கள் மின்னஞ்சல் உறுதி செய்யப்பட்டதா என்று சரிபார்த்துக்கொள்ளவும்."

ஐந்தாம் படி: "உங்கள் படங்களை விக்கிமீடியா காமன்ஸ்சில் 1-30 செப்டம்பர் 2018 தேதிகளில் இங்கு பதிவேற்றவும் "

போட்டி விதிகள்

இப்போட்டியினை எளிமையாக இருக்கும் படி செய்ய முயற்சி செய்கிறோம். இந்தியாவில் பங்கேற்க சில அடிப்படை விதிகள் உள்ளன. அவற்றை விரைவாக காண்போம். எல்லா சமர்மணமும்:

  • சுயமாக எடுக்கப்பட்டு சுயமாக பதிவேற்றப்பட வேண்டும்;
  • செம்டம்பர் மாதம் 2018யில் பதிவேற்றியிருக்க வேண்டும்;
  • சரியான தலைப்பு மற்றும் விபரம் இருக்கவேண்டும்;
  • பதிவேற்றம் செய்யும் பொழுது இப்புகைப்படங்களை CC BY-SA license என்ற காப்புரிமையில் மீண்டும் பயன்படுத்துவதற்குரிய அனுமதியை தாங்கள் அளிக்கவேண்டும்.
  • நீங்கள் புகைப்படம் எடுக்கும் சின்னம் இப்பட்டியலில் உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ளவும்.

அதற்கு பிறகு, சில நடைமுறை விதிகள் உள்ளன:

  • தங்களுக்கு விக்கிமீடியா காமன்ஸ்சில் சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல் இருக்கவேண்டும்;
  • ஏதாவது காரணத்திற்காக பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் நீக்கப்பட்டால், தானாகவே போட்டியிலிருந்தும் அப்புகைப்படம் நீக்கப்படும்;
  • புகைப்படம் எடுக்கும் பொழுதும், பதிவேற்றும் பொழுதும் சட்ட விதிகளை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.