நடுவம்:'சுய ஆக்கம்' என்ற பக்கத்தில் குறிப்பிடபட்டுள்ளவகளை மட்டுமே, பதிவேற்றம் செய்ய வேண்டும். நீங்கள் உருவாக்கிய எல்லாவற்றினையும், 'சுய ஆக்கம்' என்ற பிரிவின் கீழ்ப் பதிவேற்றம் செய்யக் கூடாது. எனவே, அப்பக்கத்தினை தவறாமல் ஒருமுறை கண்டறியவும்.
இங்குக் கட்டற்ற கோப்பு வடிவங்களை மட்டுமே, பதிவேற்ற முடியும் அவை வருமாறு;-
நிழற்படம் :jpeg
விவரப்படம் : svg / png
ஒளிதம் & ஒலிதம் : ogg
மேலும், இவை குறித்து நடுவம் : மென்பொருள் என்ற பக்கத்தில், பல்வேறு தகவல்கள் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.ஒரு பதிவேற்ற படிவம் மூலம் 20MB அளவுள்ள கோப்புகளை மட்டுமே பதிவேற்ற முடியும்.
நடுவம் : முதல்தேவைகள் என்ற பக்கத்தில், இது குறித்து நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி , பயனர் கணக்கு வேண்டும்.எனவே, புகுபதிகை செய்யவும்.
பதிவேற்ற கோப்புக்குச் சிறந்த முறையில் பெயரிடுவது, மிகமிக அத்தியாவசியமானது. அப்படிப் பெயரிட்டால் மட்டுமே, பிறர் உங்கள் கோப்பினைச் சுலபமாகக் கண்டறிய முடியும்.