சிங்கபுரி ஈஸ்வரர் சிவன் கோயில் ( Singapureeswarar sivan temple ) edit

                                ஓம் நமசிவாய!!!    ஓம் நமசிவாய!!!    ஓம் நமசிவாய!!! 
                              தென்னாடுடைய சிவனே போற்றி !!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!
 
Temple right side view
 
Temple left side view
 
அருள்மிகு சிங்கபுரி ஈஸ்வரர்


கோயில் வரலாறு ( History of temple ) edit

 
Singapureeswarar sivan temple

திருச்சிற்றம்பலம் சிங்கபுரி ஈஸ்வரர் ஆலயம் பாரதி நகரில், (ஆவடி) கோவில்பதாகையில் இருக்கிறது. இவ்வாலயத்தின் மூலவர் மிகவும் பழமையானவர்.

  இந்த கோயில் மிகவும் பழமையான சிவன் கோயில். சிவா லிங்கம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த லிங்கத்திற்கு 1000 - 1500 ஆண்டுகள் வயது இருக்கும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
  ஆரம்பத்தில் சிவலிங்கம், நந்தி சிலை மற்றும் பலிபீடம் ஆகியவை மட்டுமே அடையாளம் காணப்பட்டன, வேறு எந்த கடவுளின் சிலைகளும் காணப்படவில்லை. முதலில், சிவா லிங்கம் பாதி மறைந்த பாம்புக் கூட்டில் காணப்பட்டது. நாகங்கள் இந்த சிவ லிங்கத்தை பாதுகாத்து வந்தது என வரலாறு. பின்னர், கோயில் கட்டப்பட்டது. அதன் பிறகு, அவர்கள் அதே இடத்தில் இருந்து மற்ற கடவுள் சிலைகளை உருவாக்கினர்.
  தாமரை ஆவ்வுடையில் மேலே உள்ள இந்த சிவலிங்கம் மிகவும் பிரபலமானது. லிங்கம் வெளிப்புற மேற்பரப்பு சில இடங்களில் கடினமாகவும் மென்மையாகவும் இருக்கும்.
  மகா பெரியவாள் சந்த்ரமௌலீஸ்வர பூஜை செய்த ஸ்தலம். தாமோதரன் ஐயா திருவாசக முற்றோதல் நடத்தியிருக்கிறார்கள்.


அம்பாள் கோவிலுக்கு வந்த வரலாறு ( History of ambaal arrives to temple ) edit

 
அருள்தரும் சிங்காரவல்லி நாயகி அம்பாள்
  புனர்நிர்மானத்தின் போது அம்பாள் சிலை பிரதிஷ்டை கதையை கேட்டால் மெய்சிலிர்க்கும். அம்பாள் சிலையை எடுத்துக்கொண்டு வரும்போது மழை தூர வேண்டும் என்பது ஐதீகம். 
  அம்பாளை எடுத்துக்கொண்டு வரும்போது மழை வருவதற்க்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை. இதைக்கண்டு அனைவரும் பதைபதைத்து போனாலும் இறைவனது சங்கல்பம் என எண்ணி சிலையை கொண்டு வந்தனர்.
  ஊரினுள் வந்ததும் இடி மின்னலும் கூடிய மழை. அம்பாள் சிலையை கோவிலினுள் எடுத்து வைக்க முடியாத அளவு அன்று இரவு முழுவதும் மழை கொட்டியது. அதற்கு முன்பு வரை அப்படிப்பட்ட மழையை அந்த கிராமத்து மக்கள் பார்த்தது இல்லை. மறுநாள் காலையில் குளம், குட்டை மற்றும் கழனிகள் நீரில் நிரம்பி பூமி குளிர்ந்து இருந்தது. இது இவ்வூர் அம்பாளின் மகிமையை காட்டுகிறது. குழந்தை பாக்யம் வேண்டி வருவோர்க்கு தாயுள்ளத்துடன் அம்பாள் அருள்கிறாள்.

கோவிலில் சிறப்பு பூஜைகள் ( Special Pooja of temple ) edit

  இத்திருக்கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
  அவற்றுள் சில:
  1. பிரதோஷ பூஜைகள் (Pradhosam)
 
நந்தி
 
பிரதோஷ வழிபாடு
  2. சோமவார சிறப்பு வழிபாடு (Somavaaram)
  3. வளர்பிறை மற்றும் தேய்பிறை பைரவர் அஷ்டமி சிறப்பு பூஜைகள்
 
அருள்மிகு பைரவர்
  4. சிவராத்திரி சிறப்பு பூஜைகள் (Sivarathri)
  5. இராகு கேது பரிகார பூஜைகள் (Ragu-Kethu Pooja)
  6. அன்னாபிஷேகம் (Annabishegam)
 
  7. நவராத்திரி வழிபாடு (Navarathri special)
  8. ஆடிப்பூர அம்பாள் சிறப்பு வழிபாடு (Aadipooram)
 
சிங்காரவல்லி சிறப்பு அலங்காரம் 2
  9. ஆருத்ரா நடராஜர்  வழிபாடு (Aaruthraa natrajar)
 
ஆருத்ரா வழிபாடு


பைரவர் சிறப்பு வழிபாடு (Bhairavar Special Pooja) edit

 
அருள்மிகு பைரவர்
 
பைரவர் அஷ்டமி சிறப்பு அலங்காரம்
  தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம்  உன்னதமாக நடைபெறும். பைரவர் வழிபாடு மக்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதாக மக்களின் சொற்கள்.

குழந்தை பாக்கியம் பெற, திருமண தடை நீங்க (To get child and get married ) edit

 
சிங்காரவல்லி நாயகி
 
அம்பாள் சிங்காரவல்லி நாயகி
 
மூலவர் சிங்கபுரி ஈஸ்வரர்


  அனைத்து விண்ணப்பங்களையும் செவி சாய்த்து நடத்தி கொடுக்கும் அற்புத ஸ்வாமி சிங்கபுரி ஈஸ்வரர். திருமண பாக்யம், குழந்தை பாக்யம், தொழில் முன்னேற்றம் வேண்டி பலர் அதற்கான தீர்வு கண்டிருக்கின்றனர். 

5 சோமவார பூஜையில் கலந்து கொண்டாலே திருமண வாய்ப்புகள் கைக்கூடுவது கண்கூடு. இதற்கு சான்றுகளும் உண்டு.

மேதா தக்ஷிணாமூர்த்தி (Metha dhakshina moorthy) edit

 
மேதா தக்ஷிணாமூர்த்தி
  தக்ஷிணாமூர்த்தி எல்லாக்கோவில்களிலும் உள்ளது போல் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். இவரின் பெயர் மேதா தக்ஷிணாமூர்த்தி ஆகும். பொதுவாக குரு முதியவராகவும் சிஷ்யர்கள் இளமையானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் குரு தக்ஷிணாமூர்த்தி இளையவராக உள்ளார். அவரிடம் கற்றுக்கொள்ளும் நான்கு சிஷ்யர்கள் சனகாதி முனிவர்கள் மிகவும் முதியவர்கள்.
  அது போல் தன்னுடைய சின்முத்திரையால் அவர்களுடைய அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார். எதுவும் வாய் திறந்து உபதேசிக்காமல் மௌனமாகவே அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார். இவரை வழிபட்டால்  நம்முடைய குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பிள்ளைகளின் அனைத்து சந்தேகங்களும் தீர்ந்து விடும்.

சனீஸ்வரர் சன்னதி (Saneeswarar sannathi) edit

 
சனீஸ்வரர் சன்னதி
  கோவிலின் நுழைவு வாயிலை அடுத்து சனீஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு சனி பெயர்ச்சி காலங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் நடப்பது மிகு உன்னதம். 

ராகு கேது பரிகார பூஜைகள் மற்றும் ஹோமங்கள் அந்தந்த ராசிகளுக்கும் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பை உணர்த்துகிறது.

நவராத்திரி வழிபாடு (Navaraathiri vazhibaadu) edit

 
தேவி துர்கை அம்மன்
 
சிங்கார வல்லி தாயார்
 
சிங்காரவல்லி சிறப்பு அலங்காரம் 1
  நவராத்திரி நாட்களில் அம்பாளுக்கும், துர்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், லலிதா சஹஸ்ரநாமம், தேவாரம், திருவாசக முற்போதல் , நவராத்திரி சிறப்பு கதைகள் மற்றும் அன்னதானமும் நடைபெறும். 
  நவராத்திரி 9 நாட்களில், ஒவ்வொரு உபயதாரர்கள் பொறுப்பை ஏற்று கொண்டு அந்தந்த நாட்களில் அம்பாள் அலங்காரம், அன்னதானம் மற்ற பயன்பாட்டுக்கும் முழு செலவையும் ஏற்று, அம்பாளின் அருளை பெறுவது வழக்கம்.

கோவிலின் இருப்பிடம் மற்றும் கோவிலுக்கு செல்லும் வழி (Address of temple and route to temple) edit

  கூகிளில் ( Google map ) இத்திருக்கோவிலின் அமைவிடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  https://goo.gl/maps/3E7ZJZMDjNSGGh2L6

கொரோனாவின் போது சேவைகள் (Services during corona lock-down time ) edit

  கோவில்பதாகை கிராமத்தை சுற்றி  மூன்று ஏழை கிராமங்கள் உள்ளன. அங்கு உள்ள மக்கள் தினக்கூலி மற்றும் ஏழை வகுப்பினரை சேர்ந்தவர்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில், இந்த கிராமத்து மக்கள் கூலி வேலைகளுக்கு செல்ல முடியாமல் உணவிற்கே தட்டுப்பாடு ஏற்பட்ட நிலை இருந்தது.

இதனை அறிந்த இக்கோவிலின் அடியார்கள் மற்றும் மூர்த்தி அய்யா சேர்ந்து, இந்த மக்களுக்கு உதவ விரும்பினார்கள்.

 
Corona free food preparation 1
 
corona food service 3
 
Corona free food service preparation 2


  நிதி உதவி அனைத்து நல்ல உள்ளங்களிடமிருந்தும் சிறு மற்றும் பெரு தொகையாக கிடைக்கபெற்று, சேவைக்கு பயன்படுத்தப்பட்டது. ஏழை மக்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்குவதற்காக ஒரு நாளைக்கு செலவிடப்பட்ட தொகை சுமார் 6000 ரூபாய்.
 
Food service to poor people
 
Corona help for people
 
corona help for people


  இலவச உணவு மட்டுமல்ல, ஏழைக் குழந்தைகளுக்கு பால் பாக்கெட்டுகளையும் வழங்கினர். தினமும் காலையில், அவர்கள் கபசுர குடிநீரையும் இலவசமாக தந்து உதவினர். இ‌ந்த கோவில் மூலமாக நல்ல உணவு, பால் பாக்கெட் மற்றும் கபசுர குடிநீர் உதவிகள் மொத்தம் 50 நாட்களுக்கு ஏழை மக்களுக்கு மூன்று வேளையும் வழங்கபட்டது.
  சிங்கபுரி ஈஸ்வரர் கோயில் மூலம் வழங்கப்படும் இந்த இலவச உணவு சேவைகள் மற்றும் பிற சேவைகளை அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் ஆதரித்தனர்.


 
Corona service through policemen
 
corona help by volunteers
 
Corona services 1


  ஒவ்வொரு நாளும் கிடைக்கப்பெற்ற சிறு அல்லது பெரிய நன்கொடை பணம் அவ்வண்ணமே பகிர்ந்து உணவு மற்றும் மற்ற சேவைக்கு பயன்படுத்தப்பட்டது. கிடைக்கப்பெற்ற உதவித்தொகை சிலசமயம் குறைவாக இருந்தால் தனது தொகையையும் சேர்த்து சேவைகளை செய்தார்கள் மூர்த்தி அய்யா மற்றும் தன்னார்வ தொண்டர்கள்.
 
 
Corona help 4
 
Rice service given for food


  இலவச சேவைக்கான உணவு மற்றும் கபசுர குடிநீர் இக்கோவிலின் பின்புறம் கோவிலுக்கான பாத்திரம் மற்றும் எரிபொருட்களை பயன்படுத்தி, கோவிலை சுற்றி உள்ள தன்னார்வ தொண்டர்கள் தாங்களாவே முன்வந்து, மூர்த்தி ஐய்யா மற்றும் பலருடன் சேர்ந்து இவ்வுதவிகளை செய்தனர்.
  1. உணவு செய்வது, 
  2. எரி பொருட்களை வாங்குவது, 
  3. பொட்டலம் போடுவது, 
  4. கபசுர குடிநீர் தயார் செய்வது,
  5. மளிகை பொருட்கள் வாங்குவது, 
  6. இலவச உணவு பொருட்களை தகுந்த இடத்துக்கு எடுத்து செல்வது, 
  7. ஏழை மக்கள் மற்றும் அனைவருக்கும் விநியோகம் செய்வது காரோண ஊரடங்கு நேரத்தில்
  8. ஏழை குடும்பத்திற்கு அரிசி வழங்குதல்
  9. கைக்குழந்தைகளுக்கு பால் பாக்கெட் வீடுகளில் கொண்டு சேர்ப்பது ஊரடங்கு நேரத்தில்
 
 
 


  என பல சேவைகளை இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இக்கோவிலின் மூலமாக, இக்கோவிலுக்கு வந்த நன்கொடை மூலமாகவும், இக்கோவிலை சுற்றி உள்ள மற்றும் தன்னார்வ தொண்டர்களால் மிக அருமையாக 50 நாட்களுக்கு செய்யப்பட்டது.
 
food service for poor family
 
poor family food service
 
poor family rice service


  யாரேனும் நன்கொடையாக பணம் உணவிற்காக கொடுத்தால், அவர்கள் பெயரில், உணவு சேவையும், சிங்கபுரி ஈஸ்வரர்க்கு அவர்கள் பெயரில் அர்ச்சனையும் செய்யப்பட்டது.


உழவார பணிகள் ( Plowing works ) edit

  இத்தியிருக்கோவிலின் அடியார்கள், மற்ற கோவில்களுக்கு உழவார பணிகளுக்காக சென்று திருப்பணிகள் செய்து வருகின்றனர். உழவார பணிக்கு சென்று வரும் அடியார்களுக்கு இக்கோவிலில் அன்னதானமும் செய்தனர். 

கோவிலின் முகவரி :

அருள்மிகு சிங்கபுரி ஈஸ்வரர் சிவன் கோவில்,
29, பாரதி நகர், 
கோவில்பதாகை, ஆவடி, 
சென்னை - 600062.




உங்கள் பெயரில் சேவைகளைச் செய்ய தொடர்பு கொள்ள (To contact for service and temple ) edit

  நீங்களும் ஏழை மக்களுக்கு உதவ விரும்பினால்,  மூர்த்தி அய்யா அல்லது இ‌ந்த கோவிலை அணுகவும். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு சிறு தொகையும், உங்கள் பெயரில் ஏழை மக்களின் உணவிற்காக பயன்படுத்தப்படும். யாரேனும் நன்கொடையாக பணம் உணவிற்காக கொடுத்தால், அவர்கள் பெயரில், உணவு சேவையும், சிங்கபுரி ஈஸ்வரர்க்கு அவர்கள் பெயரில் அர்ச்சனையும் செய்யப்படும்.
 
Contact details
  நீங்கள் சிறு தொகையை கோவிலுக்கான கட்டுமான பணிகளுக்கு கொடுத்தாலும், அதையும் அவ்வண்ணமே உங்கள் பெயரில் பயன்படுத்துவோம்.
                                ஓம் நமசிவாய!!!    ஓம் நமசிவாய!!!    ஓம் நமசிவாய!!! 
                              தென்னாடுடைய சிவனே போற்றி !!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!