உலகப் பெண் குழந்தைகள் தினம் = International Day of the Girl Child அக்டோபர் 11 உலக பெண்கள் தினம் = மகளிர் தினம் மார்ச் 8 உலக மழலகள் தினம் = சில்ரன்ஸ் டே நொவெம்பர் 20 மகள்கள் தினம் = world daughters day செப்டம்பர்24 உலகப் பெண் குழந்தைகள் தினம் = International Day of the Girl Child இன்று பாலின சமத்துவம் ,சகல துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு,பாதுகாப்பு,அங்கீகாரம் ,வளர்ச்சியை அதிகரித்தல் ,வன்முறைகளை களைதல் போன்றனவற்றிற்கு இந்த சமூகம் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப்பெண் குழந்தைகள் நினைத்ததை சாதிக்க உறுதுணையாக நின்று ,இவர்கள் பின்னாளில் சாதனைப்பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவுகூரும் நாள். முக்கியமாக இந்த குழந்தைப்பருவத்தில்தான் இவர்களின் வாழ்க்கை பல வழிகளில் முடக்கப்படுகிறது. அதற்கான விழிப்புணர்வு நாள் இது. இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது . இதில் ஏராளமான அமைப்புக்கள் சேர்ந்து கொண்டு குழந்தைத்திருமணம் ,கல்வி மறுப்பு ,வறுமை,பாகுபாடு ,வன்முறை என்பவற்றில் இருந்து உலகெங்கிலும் எராளமான பெண்களை மீட்டெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் பெண் குழந்தைகளுக்கான இடையூறுகள் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளிலும் வறுமைப்பட்ட நாடுகளிலும் கட்டுங்கடங்காமல் சென்றுகொண்டிருப்பதற்கான காரணம் தனிநபர் விழிப்புணர்வின்மையே. ஆகவே உங்களுடன் பாதுகாப்பாக இருக்கும் உங்கள் மகள்களின் தினமல்ல இது .அபாயத்தில் உள்ள ,நிர்கதியாக உள்ள ,சிரமத்தில் உள்ள ,புத்திசாலித்தனங்கள் மழுங்கடிக்கப்படும் நிலையில் உள்ள பெண்குழந்தைகளை கைதூக்கிவிடும் எண்ணங்களை விதைப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறப்புநாள் . இன்றைய நாளில் நீங்கள் பெண்குழந்தைகளுக்காக செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி அவர்களுக்கு அநியாயம் நடக்கும்போது தட்டிக்கேட்க முடியாவிட்டால் கூட அவை சார்ந்த நிறுவனங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் . பெண் குழந்தைகளை ஊதாசீனம் செய்யும் நாடும் வீடும் என்றுமே வளர்ச்சி காணாது என்ற உண்மையை ,வளர்ச்சி அடைந்த நாடுகள் மகிழ்ச்சி கொண்ட குடும்பங்களை உற்று நோக்கி நீங்களும் பெண்களையும் அவர்தம் திறமைகளையும் மேம்படுத்த உதவுதலே சாலச்சிறந்தது. பெண் குழந்தைகளின் வளர்ச்சியை தங்குதடையின்றி ஆதரிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சுரேஜினி பாலகுமாரன்.